நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்: யாழில் அலையென திரண்ட புலம்பெயர் தமிழர்கள்

OruvanOruvan

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை 09.38 மணி முதல் 11.20 மணி வரையிலான சுப நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய பரிபாலன சபை தெரிவித்திருந்தது.

புலம்பெயர் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள்களின் பக்தி வெள்ளத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தர்களினதும், சுற்றுலா பயணிகளினதும் நலன்கருதி விசேட போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விழா ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.