SHORT STORY: 40 சொற்களில் நாளாந்த செய்தி

OruvanOruvan

Short Story 24.01.2024

சீனி வரி மோசடி குறித்த விசாரணை நிறைவு

சீனி வரி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நிறைவு செய்துள்ளதாகவும், மோசடி தொடர்பில் ஆலோசனைகளை பெரும் வகையில், விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்தார்.

முட்டை விலை அதிகரிப்பு

வட் வரி அதிகரிப்புக்கு அமைவாக முட்டை ஒன்றின் விலையை 03 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கு அமைவாக கோழிப் பண்ணைகளிலிருந்து 45 ரூபாவுக்கு விற்க்கப்படும் முடையின் விலை 48 ரூபாவாக அதிகரிக்கும்.

நிஹால் தல்துவவுக்கு DIG ஆக பதவி உயர்வு

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராக (DIG) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இதன்படி, பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி DIG நிஹால் தல்துவ, தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றுவார்.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டோருக்கான விளக்கமறியல் நீடிப்பு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த உட்பட ஏழு சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் பெப்ரவரி 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகளை சர்ச்சைக்குரிய வகையில் கொள்வனவு செய்தமை தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு சட்டமூலங்களை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம், மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டமூலம், அற்றோணித் தத்துவம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றில் நேற்று (23) கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (24) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

‘அவலோகிதேஸ்வர போதிசத்வா’வுக்கு விளக்கமறியல் நீடிப்பு

’அவலோகிதேஸ்வர போதிசத்வா’ என தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட மஹிந்த கொடிதுவாக்கு எதிர்வரும் பெப்ரவரி 07ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது.

பௌத்த போதனைகளுக்கு முரணான சமயச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கொடிதுவாக்கு ஜனவரி 15ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார்.

மாத்தறை - கதிர்காமம் வீதியில் விபத்த்தில் ஐவர் காயம்

மாத்தறை - கதிர்காமம் பிரதான வீதியில் ஹுங்கம மெதஎலிய பிரதேசத்தில் வேன் ஒன்றும், சிறிய லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருவளை பகுதியிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற வேன் பாதையை விட்டு விலகி முன்னால் வந்த லொறியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பெலியத்தையில் 5 பேர் சுட்டுக் கொலை; முதல் சந்தேக நபர் கைது

பெலியத்தை பகுதியில் அண்மையில் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய சமன் குமார என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 முதல் தேசிய பரீட்சைகள் வழமைக்கு

2025 முதல் அனைத்து தேசிய பரீட்சைகளும் வழமையான கால அட்டவணையின் படி நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று ( 24) காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

2025 முதல் தேசிய பரீட்சைகள் வழமைக்கு

2025 முதல் அனைத்து தேசிய பரீட்சைகளும் வழமையான கால அட்டவணையின் படி நடைபெறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று ( 24) காலை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

விஸ்வ புத்தருக்கு விளக்கமறியல் நீடிப்பு

‘விஸ்வ புத்தர்’ என தன்மை அடையாப்படுத்தி பெளத்த மதத்துக்கு இழவு ஏற்படும் வகையில் செயற்பட்ட நபருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நுகேகொட, கங்கொடவில நீதிவான் உத்தரவுக்கு அமைய அவரின் விளக்கமறியல் ஜனவரி 29 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ரக்பி பயிற்றுவிப்பாளர் கைது

கண்டி, அம்பதென்ன பகுதியில் 4,100 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் வைத்திருந்த 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பாடசாலை ஒன்றின் வெளிப்புற ரக்பி பயிற்றுவிப்பாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

290% கொள்ளளவை கடந்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை

நாடளாவிய ரீதியில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் கொள்ளளவு 290 வீதத்தை கடந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அண்மையில் கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசல் முகாமைத்துவம் தொடர்பான செயற்திறன் தணிக்கை அறிக்கையில் இது தெரியவந்துள்ளது.

இலங்கையில் ஒன்பது நாட்களுக்குள் எட்டு பேர் சுட்டுக்கொலை

இலங்கையில் ஜனவரி 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையான 9 நாட்களுக்குள் 8 பேர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களால் இடம்பெறுவதொடு, இதுவரையில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேிரிவு தெரிவித்துள்ளது.

போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவு

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து, பாராளுமன்றத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் பிரதான வீதியை மறித்து இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் (SYU) தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர, ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

பெலியத்தை துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய வாகனம் மீட்பு

பெலியத்தை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையோர் பயன்படுத்தியதாக கருதப்படும் வாகனம் காலி வித்யாலோக பிரிவேனா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (22) இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்க்கது.

7 மீனவர்களுக்கு மரண தண்டனை

கடந்த 2012 ஆம் ஆண்டு மீன்பிடி கப்பலை கடத்தி 3 பேரைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

ஆனையிறவு பகுதியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வான் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

‘யுக்திய’ நடவடிக்கை - 930 சந்தேகநபர்கள் கைது

நாடு தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான ‘யுக்திய’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இன்று நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர இடைவெளியில் மேலும் 930 சந்தேகநபர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி, இந்த 24 மணி நேர சாளரத்தின் போது மீட்கப்பட்ட போதைப் பொருட்களில் 425 கிராம் ஹெராயின், 235 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) மற்றும் 4,351 போதை மாத்திரைகள் அடங்கும்.

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் 2ஆவது விவாதம் இன்று

நிகழ்நிலை காப்பு சட்டமூலம்(Online Safety Bill) தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று(24) இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று(24) மாலை நடைபெறவுள்ளது.இதனிடையே, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்திற்கு சிவில் அமைப்பினர் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்றைய வானிலை

நாட்டில் முக்கியமாக மழையற்ற வானிலை இருக்கும்.நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இரு குழுக்களிடையே தாக்குதல்

மீகஹகிவுல- அக்கலஉல்பாத கிராமத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த மூவர் மீகஹகிவுல மாவட்ட வைத்தியசாலையிலும் பதுளை போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.