சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் தொடர்பாக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு: பொலிஸார் எடுத்த முடிவு

OruvanOruvan

Sri Lankan Police

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

யுக்திய நடவடிக்கையின் கீழ், சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைகளுக்கு தேவையான தகவல்களை வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கவும் பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி, யுக்திய நடவடிக்கைக்கு தகவல் வழங்கும் நபர்களுக்கு இந்த வெகுமதி பணம் எதிர்காலத்தில் வழங்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தகவல் அளிக்கும் நபர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும், இது தொடர்பாக அச்சப்பட வேண்டாம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ், சட்டத்தை ஏமாற்றும் குற்றவாளிகள், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மற்றும் பெருமளவிலான போதைப்பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.