ராஜபக்சவினரை பாதுகாக்கவே நிகழ்நிலை காப்புச்சட்டம் கொண்டு வரப்படுகிறது: பாதுகாப்புச் சட்டங்களால் தப்பிக்க முடியாது

OruvanOruvan

Nalin Bandara MP Sri Lanka Parliament

நிகழ்நிலை காப்புச் சட்டம் ராஜபக்சவினரை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட ஒன்றென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நனின் பண்டார இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது நீதியான சட்டமூலம்,திருத்தத் துறைசார் குழுக்களில் நிறைவேற்றப்படவில்லை. அவசரமாக சட்டமூலத்தை கொண்டு வருகின்றனர். அரசாங்கம் பெரிய பீதியில் இருக்கின்றது. எந்த சந்தர்ப்பத்திலும் சமூகத்திற்கு எழுச்சி ஏற்படலாம் என்பதை அவர்கள் அறிவார்கள்.

நூற்றுக்கு 18 வீதம் பெறுமதி சேர் வரி அறவிடப்படுகிறது. மக்களுக்கு வாழ முடியா நிலைமை ஏற்பட்டுள்ளது.

எந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டாலும் இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலை நடத்தியாக வேண்டும்.

இவர்களுக்கு பாதுகாப்புச் சட்டங்களால் தப்பித்து இருக்க முடியாது. பாதுகாப்பு வீடுகளுக்கு செல்ல நேரிடும். மக்கள் தமது வாக்குகள் மூலம் இவற்றுக்கு பதிலளிக்க காத்திருக்கின்றனர்.

அப்போது இப்படியான சட்டங்கள் மூலம் தப்பித்து இருக்க முடியாது. பதில் கிடைக்கும் போது செல்ல இடமிருக்காது. ஐக்கிய மக்கள் சக்தி இந்த சட்டமூலத்தை எதிர்க்கின்றது.

2024 ஆம் ஆண்டு அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஊடகங்களுக்கு சுதந்திரத்தை வழங்குவோம் எனவும் நளின் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.