SHORT STORY: இன்றைய நிலவரங்கள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story 23.04.2.24

பிறந்து 13 நாட்களான பச்சிளம் குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் பிறந்து 13 நாட்களேயான பெண் குழந்தையொன்று பால் புரைக்கேறியதில் உயிரிழந்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குழந்தையின் தாயிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டள்ளது.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி குழந்தை பால் புரைக்கேறி உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

OruvanOruvan

பல் அறுவை சிகிச்சை நிபுணர்களும் போராட்டம்

அரச வைத்தியர்களுக்கு அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 35ஆயிரம் ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி பல் அறுவை சிகிச்சை நிபுணர்களும் போராட்டத்தில் குதிக்க உள்ளனர்.

இவர்கள் நாளை (ஜனவரி 24) காலை 8.00 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

OruvanOruvan

நாரம்மல்ல சம்பவம்; உப பொலிஸ் பரிசோதகருக்கான விளக்கமறியல் நீடிப்பு

நாரம்மல்ல துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் ஜனவரி 31 ஆம் திகதி வரை நாரம்மல நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த வியாழன் (18) இரவு லொறி சாரதி ஒருவர் மீது குறித்த பொலிஸ் அதிகாரி தற்செயலாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

இதனால் குறித்த லொறி சாரதி உயிரிழந்தமையைும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

நாளை முதல் போராட்டத்தை ஆம்பிக்கும் GMOA

நாளை (24) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தீர்மானித்துள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் நாளை காலை 08.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

முன்னர் குறிப்பிட்டது போன்று ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

OruvanOruvan

GMOA

ரயிலுடன் கார் மோதி விபத்து

மிதிகம பகுதியில் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த இரு வெளிநாட்டு பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.

அவர்கள் தற்சமயம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

OruvanOruvan

புதிய சிசிடிவி கமரா கண்காணிப்பு முறை; 125 சாரதிகளுக்கு எச்சரிக்கை

கொழும்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சிசிடிவி கமரா கண்காணிப்பு முயற்சியின் மூலம் போக்குவரத்து விதி முறைகளை மீறிய‍ 125 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட நடவடிக்கையாக விதி முறைகளை மீறிய வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் சிசிடிவி கமெரா முயற்சி நேற்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.

33 இடங்களில் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்கத்கது.

OruvanOruvan

மீண்டும் அறிமுகமாகும் மொபிடெல் உபகார பெகேஜ் : கூடுதல் நன்மையடையும் ஊடகவியலாளர்கள்

மொபிடெல் நிறுவனத்தினால் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் உபகார பெகேஜை, புதிய சலுகைகளுடன் மீண்டும் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தில் பதிவுசெய்துள்ள ஊடகவியலாளர்களு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

OruvanOruvan

யுக்திய சுற்றிவளைப்பில் 24 மணித்தியாலங்களில் 955 சந்தேகநபர்கள் கைது

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் 24 மணித்தியாலங்களில் 955 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 633 சந்தேக நபர்களும், குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள் பட்டியலில் இருந்த 322 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 7 பேர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படகின்றன.

OruvanOruvan

Yukthiya Operation

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று (23) காலை நாடு திரும்பியுள்ளார்.

உலகப் பொருளாதார மன்றத்தின் 54 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமாக ஜனவரி 13 ஆம் திகதி ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு பயணமானார்.

அதன் பின்னர் ஜனவரி 18 ஆம் திகதி உகாண்டாவுக்குப் புறப்பட்டு, அணிசேரா நாடுகளின் 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் சீனா மற்றும் தென் துருவத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்றார்.

Photo credit - Getty ImagePhoto credit - Getty Image

President Ranil Wickremesinghe Photo credit - Getty Image

20 நாட்களில் 3 டெங்கு மரணம்

இந்த வருடத்தின் முதல் 20 நாட்களுக்குள் மூன்று டெங்கு மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 7,507 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு போதாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

3 dengue deaths in 20 days

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஊர்காவற்துறை - குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலரும் காயமடைந்துள்ளதாகவும் அம்புலன்ஸ் வண்டிகள் அப்பகுதிக்கு செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

OruvanOruvan

சுதுமலைப் பொதுச்சுகாதாரப்பரிசோதகர் பிரிவில் 21 டெங்கு நோயாளர்கள்

சுதுமலைப் பொதுச்சுகாதாரப்பரிசோதகர் பிரிவில் டெங்குக்கட்டுப்பாட்டுப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் 21 டெங்கு நோயாளர்கள் சுதுமலைப்பகுதுயில் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.

அதன்படி இதுவரை 23 பேரிற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், நுளம்புக்குடம்பிகள் வைத்துருந்த 4 பேரிற்கு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு 4500 ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் ஒருவரிற்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

பல வெற்றுக்காணிகளிற்கு எதிராக 7 நாள் தவணை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து விசேட கொடுப்பனவு

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு இந்த மாதம் முதல் 2,000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்ககுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது X கணக்கில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி பிரிவெனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

OruvanOruvan

உணவுக்காக பேருந்தை தாக்கிய காட்டு யானை

கதிர்காமம்-புத்தல வீதியில் நேற்று பிற்பகல் 2.30 அளவில் கிரிந்த பிரதேசத்தில் பயணித்த பேருந்து மீது காட்டு யானை தாக்கியுள்ளது.

வீதியில் நின்றுக்கொண்டிருந்த யானையே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

அத்துடன் பேருந்தில் இருந்த பழங்கள் உட்பட உணவுகளை பெற்றுக்கொள்வதற்காக யானை பேருந்தை தாக்கி, கதவு மற்றும் இரண்டு கண்ணாடிகளை உடைத்துள்ளது.

OruvanOruvan

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தார் புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் புதிய உயர்ஸ்தானிகருக்கு முன்னாள் ஜனாதிபதி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இலங்கை சிரமமான நிலைமையை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் இந்திய வழங்கிய உதவிகள் தொடர்பில் நன்றி தெரிவிப்பதாகவும் இலங்கையின் அபிவிருத்திக்காக தொடர்ந்தும் வழங்கி வரும் உதவிகளுக்கும் நன்றி கூறுவதாகவும் முன்னாள் ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஐக்கியத்தை அதிகரிக்க இந்தியா அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் இலங்கைக்கு தேவையான உதவிகளை தொடர்ந்தும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளாார்.

OruvanOruvan

பாராளுமன்றத்தின் மின் கட்டணம் மாதாந்தம் செலுத்தப்படுகிறது-கஞ்சன விஜேசேகர

பாராளுமன்றம் தனது மின்சார கட்டணங்களை மாதாந்தம் செலுத்தி வருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

7 கோடி ரூபா மின் கட்டணத்தை செலுத்தவில்லை என ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி செயலகமும் எவ்வித பாக்கியும் வைக்காது மின் கட்டணத்தை செலுத்தியுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உள்ள அனைவருக்கும் அவமதிப்பு ஏற்படும் வகையில் பொய்யான தகவலை வெளியிட்டுள்ள ரஞ்சன் ஜயலாலை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவுக்கு அழைக்குமாறும் அமைச்சர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.