பொதுஜன பெரமுன கிராமங்களுக்கு செல்வதை தடுக்க முடியாது: கொள்கை இல்லாத கட்சிகள் “ஊ” சத்தமிடுகின்றன-நாமல்

OruvanOruvan

Namal Rajapaksa MP

எப்படியான சவால்கள் வந்தாலும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டாலும் கட்சியினருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினருடன் கிராமங்களில் இயங்கும் எனவும் தமது கட்சி கிராமங்களுக்கு செல்வதை தடுக்கும் நோக்கிலேயே அரசியல் கட்சிகள் “ஊ” சத்தமிடுவதாகவும் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் வெளியில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டாயம் கிராமங்களுக்கு செல்லும் கொள்கை இல்லாத சில அரசியல் கட்சிகளுக்கு “ஊ” சத்தமிடுவதை தவிர வேறு மாற்று எதுவுமில்லை

நாங்கள் விளையாடியவர்கள் என்ற வகையில் றக்பி என்றால் ரெப்ரியை திட்டுவோம், கிரிக்கெட் என்றால் அம்பயாரை திட்டுவோம்.

தோல்வியடையும் அல்லது வெற்றி பெறும் அணியை பார்த்து பார்வையாளர்கள் “ஊ” சத்தமிடுவதை பார்த்திருக்கின்றோம்.

சில அரசியல் கட்சிகள் வங்குரோத்து அடையும் போது, கொள்கை இல்லாத போது இந்த வழிமுறையை பின்பற்றுகின்றன.

பொதுஜன பெரமுன கிராமங்களுக்கு செல்வதை தடுக்க வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர்.

கிராமத்திற்கு செல்லவில்லை என்றால், பொதுஜன பெரமுன கிராமத்திற்கு வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.

1988 ஆம் ஆண்டில் இருந்து வீடுகளை தீயிட்ட கட்சி பாராளுமன்றத்தில் இருக்கின்றது.

அவர்களில் தலைமைத்துவம் தொடர்பான சவால்கள் இருக்கும் நபர்கள், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிட்டு கொண்டு துள்ளி குதிக்கின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.