நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொதுமக்களிடம் ஆலோசனை: குறுஞ்செய்தி மூலம் அறிவிக்குமாறு வேண்டுகோள்

OruvanOruvan

text message

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொது மக்களின் ஆலோசனைகளை பெறுவதற்கு சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் OSB YES எனவும் இல்லை எனில் OSB NO எனவும் பதிவிட்டு 0767 001 001 எனும் இலக்கத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது நேரடி ஜனநாயக முயற்சியின் ஒரு பகுதியாக எனவும், நாட்டு மக்கள் அரசாங்கத்தின் கொள்கைகளில் நேரடியாக வாக்களிப்பதற்கு அனுமதிக்கும் எனவும் நம்பப்படுகிறது.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும், ஊழலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் ஊடகவியலாளர்களை ஒடுக்கவும், தகவல் தொழில்நுட்பத் துறையை பாதிக்கவும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் பயன்படுத்தப்படலாம் என சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டங்கள் ஏற்கனவே இலங்கையில் உள்ள நிலையில், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தேவையில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.