பாராளுமன்ற மின்கட்டண நிலுவை: பொய்யான தகவல், சிறப்புரிமைக்குழுவின் முன் விசாரணைக்கு அழைப்பு

OruvanOruvan

பாராளுமன்றம் அல்லது ஜனாதிபதி அலுவலகம் என்பவற்றில் மின்சாரக் கட்டணம் நிலுவை ஏதும் இல்லை என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது விசேட உரையொன்றின் மூலம் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்

பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பவற்றில் பாரிய மின்கட்டண நிலுவை இருப்பதாக சமீப நாட்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அவற்றை மறுக்கும் வகையில் அமைச்சர் இந்தக் கருத்தை வௌியிட்டுள்ளார்

மேலும் பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் என்பன தொடர்பில் பொய்யான தகவல்களை மக்கள் மயப்படுத்திய குற்றத்துக்காக மின்சார சபை ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் , பாராளுமன்ற சிறப்புரிமைக்குழுவின் முன் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.