அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது: படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன

OruvanOruvan

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பினுள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட ஆறு தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீன்பிடியில் ஈடப்பட்ட மீனவர்களின் படகுகளும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.