நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படக்கூடாது: 13வது திருத்தச்சட்டத்தை காரணம் காட்டி எதிர்க்கும் எதிர்க்கட்சிகள்

OruvanOruvan

Abolish executive Presidency

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பில் வைத்துக்கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை இரத்துச் செய்யப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதாக தெரியவருகிறது.

இது சம்பந்தமாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மேலும் சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை ஒழிப்பது தொடர்பாக கலந்துரையாடல்கள் சமூகத்திற்குள் மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் இதனை மேற்கொள்ள முயற்சிப்பதாக சுதந்திர மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் ஏற்பட வேண்டும்.

அத்துடன் 13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலையில்,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட கூடாது.

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால், மாகாண சபைகள் தொடர்பில் சிக்கல்கள் உருவாகும். குறிப்பாக வடக்கு,கிழக்கு மாகாணங்கள் சம்பந்தமாக பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.

மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படுவதன் மூலம் நாட்டில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாம் எனவும் நாட்டின் வன்முறையான நிலைமைகள் உருவாகலாம் எனவும் இதனால், இந்த விடயம் சம்பந்தமாக எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.