நாயை வேட்டையாட முயற்சித்த சிறுத்தை: டயகமவில் வியக்க வைத்த சம்பவம் (காணொளி இணைப்பு)

OruvanOruvan

Cheetah attack in dayagama

டயகம பிரதேசத்தில் பெரிய சிறுத்தையொன்று நாயை பிடிக்கும் சிசிடிவி காணொளி வைரலாகியுள்ளது.

குறித்த காணொளியில், பதுங்கியிருந்து பாய்ந்து வரும் குறித்த சிறுத்தை ஓய்வெடுக்கும் நாயை கழுத்தை பிடித்து இழுத்து செல்வது பதிவாகியுள்ளது.

அந்த நேரம் நாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த வேலைக்காரர் சிறுத்தை விரட்டியடிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.

நல்ல வேளை, அந்த நாய் உயிருடன் தப்பித்துக்கொண்டது...

மலையகத்தில் இவ்வாறான பிரதேசங்களில் அதிகமான சிறுத்தை தாக்குதல்கள், வலையில் சிக்கிய சிறுத்தைகள் பல பிடிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவ்வளவு பெரிய நாயை பிடித்துச்செல்லும் சிறுத்தை, அந்த இடத்தில் சிறுவர்கள் இருந்திருந்தால் அங்கு நிலையே வேறு...