கொடுப்பனவு சம்பளத்துடன் சேர்க்கப்படவில்லை: தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் வைத்தியர்கள்
நாளை (24) காலை 8 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீமானித்துள்ளது.
அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவு ஜனவரி மாத சம்பளத்துடன் சேர்க்கப்படவில்லை என கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு செயற்குழு அனுமதி அளித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாளைய தினம் கூடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு, தொழிற்சங்க நடவடிக்கைகளின் எதிர்கால திட்டம் குறித்து கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.