கொலை செய்யப்பட்ட சமன்பெரேரா பாதாள குழு உறுப்பினரா?: தேசபந்துவுக்கும் கொலைக்கும் தொடர்பு?

OruvanOruvan

Saman Perera Murder

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவமானது இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதில் அபே ஜன பல கட்சி தலைவர் சமன்பெரேரா சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

OruvanOruvan

துப்பாக்கி சூட்டு சம்பவம்

இன்று காலை 'வெள்ளைநிற டிஃபென்டர் ரக காரை' குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சமன் பெரேராவை குறிவைத்து நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சமன் பெரேரா உள்ளிட்ட டிஃபென்டர் காரில் வந்த குழுவினர் சாப்பிடுவதற்காக வண்டியிலிருந்து இறங்கிய போது 'தாக்குதல்' நடத்தப்பட்டுள்ளது.

பச்சை நிற கெப் ரக வண்டியில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

OruvanOruvan

அபே ஜன பல கட்சியில் சமன் பெரேரா யார்?

'ராயல் பீச் சமன்' என அழைக்கப்படும் 'சமன் பெரேரா', அபே ஜன பல கட்சியுடன் இணைந்து பின்னர் 2020ஆம் ஆண்டு பாரிய மாற்றத்தை கட்சிலும் தனது தொகுதியில் ஏற்படுத்தி இருந்தார்.

அபே ஜன பல கட்சியின் 'தலைவர்' தொடர்பான நெருக்கடி ஏற்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருந்தது.

அந்த 'ஆசனத்திற்காக' அபே ஜன பல கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கலகொட அத்தே ஞானசார (பொதுபல சேனா செயலாளர்) மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் போட்டியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

சமன் பெரோராவின் கொலைக்கு ஏதுவாகும் என சந்தேகிக்கும் காரணங்கள் என்ன?

சிறிது காலம் சென்று கடந்த 2022ஆம் ஜூன் மாதம் இடம்பெற்ற ஒரு கொலை வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் தங்கல்ல பொலிஸார் சமன் பெரேராவை கைது செய்திருந்தனர்.

இதற்கு முன்னர் முன்னாள் பலபிட்டி உள்ளூராட்சி மன்றத் தலைவர் ஸ்டான்லி தப்ரு மற்றும் அவரது மகன்களைக் கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதற்கும் தற்போது சமன் பெரேரா கொலை செய்யப்பட்டதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? என்ற சந்தேகமும் எழுந்துந்துள்ளது.

ஆனால் சிறிது காலங்களின் முன் சமன்பெரேரா அளித்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

​​சமன் பெரேராவின் அந்த நேர்காணல் (சமுதித சமரவிக்ரமவுடன் நடத்தப்பட்டது) அந்த காலகட்டத்தில் தீவிர சர்ச்சைக்கு வழிவகுத்தது எனலாம்.

அதிலிருந்து சில...

கேள்வி : சமன் பெரேரா நீங்கள் அரசியல்வாதியா? ஒரு தொழிலதிபரா? பாதாள உலகக் கும்பல் தலைவனா? ஒரு ஒப்பந்தத்தை முறிப்பவரா?

பதில் : "வியாபாரி" அல்லது "பாதாள உலகத் தலைவர்" என்ற சொல்லை முற்றிலுமாக அகற்றவும். அதற்கான தகுதி எனக்கு அறவே இல்லை... பாதாள உலக தலைவன், கொலைகாரன் என்றால் ஆயுதம் ஏந்த வேண்டும், கப்பம் வாங்குபவனாக இருக்க வேண்டும்.. நான் அப்படியானவன் அல்ல“ என தெரிவித்திருந்தார்.

கேள்வி : கொஸ்கொட சுஜி உங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா? உங்கள் சகோதரனையும் கொலை செய்தது கொஸ்கொட சுஜியா?

பதில் : அவர் எனது சகோதரர் அல்ல மைத்துனர். அவர் கப்பம் கேட்டு அவரை மிரட்டினார். அவர் தர மறுத்ததால் கொலை செய்யப்பட்டார்.

OruvanOruvan

கொஸ்கொட சுஜி

என்னிடமும் கப்பம் பெற முயற்சி செய்தார். ஆனால், அது நடக்கவில்லை.

தேஷபந்து தென்னகோன் (தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர்) ரதன தேரர் ஆகியோரும் தம்மை கடத்த முயன்றதாக 'சமன் பெரேரா' இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டிருந்தார்.

எது எப்படியிருந்தாலும், 'சமன் பெரேரா' கொலைக்கும் 'கொஸ்கொட சுஜி'க்கும் தொடர்பு இருப்பதாக 'விசாரணையாளர்கள்' இப்போது சந்தேகிக்கின்றனர்.

தற்போது இந்த கலந்துரையாடல் சகோதர மொழி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சிலநேரங்களில் இந்த சம்பவங்களுக்கும் கொலைக்கும் தொடர்பு இருக்குமா? என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

OruvanOruvan