SHORT STORY: உள்நாட்டு விபரங்கள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story

இந்திய முட்டை இறக்குமதியில் மோசடிகள் இல்லை : அமைச்சர் மறுப்பு

OruvanOruvan

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதில் இலஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் நளின் பெர்னாண்டோ மறுத்துள்ளார்.

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் போது கமிஷன் பெறுவதாக ஆதாரம் இருந்தால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றும் அது உறுதி செய்யப்பட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளார்.

புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு - இன்று முதல் அமுலில்

OruvanOruvan

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் கொழும்பில் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி கொழும்பு நகருக்குள் 108 சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஊடாக அதற்கான தண்டப்பணம் அறிவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வித்தியா கொலை வழக்கு : கைதிகளின் மேன்முறையீடுகள் இன்று விசாரணைக்கு

OruvanOruvan

யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த உயிரிழந்த மாணவி சிவலோகநாதன் வித்தியா, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த வழக்கில் தண்டனை பெற்ற மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீடுகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015.05.13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்ட நிலையில், பாலியல் துஸ்ப்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

76ஆவது சுதந்திர தினத்தில் பங்கேற்கும் தாய்லாந்து பிரதமர்

OruvanOruvan

இலங்கையின் 76ஆவது சுதந்திர தின நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் கலந்துகொள்ளவுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், பெப்ரவரி 3ஆம் திகதி தாய்லாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

இலங்கையின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் நினைவு பதிப்பொன்றை அச்சிட்டு வழங்கவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வடமராட்சியில் விபத்து : இருவர் படுகாயம்

OruvanOruvan

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்று விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இருவர் பலத்த காயங்களுடன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுஜன பெரமுனவின் 'தச பல சேனா' வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்

OruvanOruvan

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 'தச பல சேனா' வேலைத்திட்டம் கொழும்பு மாவட்டத்தை மையமாகக்கொண்டு இன்று மொறட்டுவையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் எந்தவொரு தேர்தலின் போதும் கட்சியை தயார்படுத்துவதும், அடிமட்டத்தில் கட்சியை வலுப்படுத்துவதும் இதன் நோக்கமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மீது சுமத்தப்படும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இருந்து 10 பேர் தெரிவு செய்யப்பட்டு 'தச பல சேனா' வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

58 வயதான பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த நபர் கைது

உலப்பனை உலபனாவத்த, பல்லேகம தேயிலை தொழிற்சாலையில் தொழில் புரியும் 58 வயதான பெண் ஊழியரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த 43 வயதான முகாமையாளரை ஏத்கல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதிகாலை 2 மணியளவில் கடமைக்காக முகாமையாளர் அந்த பெண்ணை அவரது வீட்டில் இருந்து வேனில் அழைத்துச் செல்லும் வழியில் வேனை பாழடைந்த இடம் ஒன்றில் நிறுத்தி விட்டு பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பெண் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைகளுடன் தொடர்புடைய இராணுவ வீரர் கைது

திட்டமிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவுடன் தொடர்புள்ளவர் எனக்கூறப்படும் இராணுவ வீரரை, விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அண்மையில் பலப்பிட்டிய பிரதேசத்தில் நடந்த கொலை முயற்சி, கடந்த ஆண்டு நடந்த கொலை சம்பவம் ஆகியவற்றுடன் இவருக்கு தொடர்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் திகதி கொஸ்கொட பிரதேசத்தில் ரன்மல்லி என்ற விஜித் மகேந்திர டி சில்வா என்பவரை கொலை செய்ய இந்த சந்தேக நபரே துப்பாக்கிதாரியாக செயற்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

OruvanOruvan

Dayasiri Jayasekara

தயாசிறிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ராபாலவின் பணிக்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு தடுத்து அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தவை நீதிமன்றம் இன்று எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன,கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

மைத்திரிபால சிறிசேனவின் மகளது வீட்டை உடைத்து கொள்ளையிட்ட திருடர்கள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் வசித்து வரும் பத்தரமுல்ல விக்ரமசிங்கபுர பிரதேசத்தில் உள்ள இரண்டு மாடி வீட்டை உடைத்து,அங்கிருந்த சுமார் 30 லட்சம் பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலுமாரியில் இருந்த ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம், தங்கமுலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை,ஸ்மார்ட் கைக்கடிகாரம், தங்கமுலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் காசுகள்,உணவு பொருட்கள் மற்றும் பாடசாலை புத்தக பை என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவின் மகளது கணவன் கொழும்புக்கு வந்திருந்த நேரத்தில் திருடர்கள் சமையலறையின் ஜன்னல் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்து கொள்ளையிட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

OruvanOruvan

Death

அதிகமான மாத்திரைfகளை உட்கொண்ட பேராசிரியர் மரணம்

அதிகமான மாத்திரைகளை உட்கொண்டதன் காரணமாக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் பேராசிரியர் ஒருவர் இன்று (22) மதியம் உயிரிழந்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்திற்கு சொந்தமான உத்தியோகபூர்வ வீட்டில் மனைவியுடன் தங்கியிருந்த இந்த பேராசிரியர் ஆபத்தான நிலைமையில் இன்று அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். மரணம் சம்பந்தமாக பேராதனை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

OruvanOruvan

நாரம்மல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் டிரான் இட்டுள்ள பதிவு

நாரம்மல பிரதேசத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக துரிதமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரொஷான் குமாரதிலக்கவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

நாரம்மல பிரதேசத்தில் சிவில் உடையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ரொஷான் குமாரதிலக்க உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு பொலிஸ் திணைக்களத்தில் சார்பில் 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.