காலநிலை மாற்றம்: ஊர்,உறைவிடத்தை விட்டு வெளியேறும் மக்கள்

OruvanOruvan

Flood Getty Images

மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் காரணமாக தற்போது முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள காலநிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து உலக சமூகம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

காலநிலை மாற்றங்களால்,கடும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் அதேவேளையில் ஆயிரக்காண மனிதர்களும், விலங்குகளும் உயிரிழந்து வருகின்றன.

பனிப்பாறைகள் உருகுவதன் காரணமாக கடலின் நீர் மட்டம் உயர்ந்து வருவது, பச்சை வீட்டு விளைவால் பூமியின் வெப்பம் அதிகரித்திருப்பது,எதிர்பாராத வெள்ள நிலைமைகள்,கடும் வறட்சி போன்ற காலநிலைகள் காரணமாக அகதிகளும், குடியேற்றவாசிகளும் அதிகரித்து வருகின்றனர். இந்த பிரச்சினையாது சில நாடுகளால் முகாமைத்துவம் செய்துக்கொள்ள முடியாத மட்டத்தில் உள்ளது.

“காலநிலை மாற்றம்”என்ற தலைப்பு அண்மைய காலம் வரை இலங்கையர்களுக்கு பழகி போன தலைப்பாக இருக்கவில்லை.

எனினும் அண்மைய காலத்தில் எதிர்நோக்கி எதிர்பாராத காலநிலை நிலைமைகள் காரணமாக தற்போது சிலர் இது சம்பந்தமாக கவனம் செலுத்தியுள்ளனர்.

தற்போது காலநிலை மற்றும் காலநிலை மாற்றங்களின் விளைவுகளை இலங்கையும் எதிர்நோக்கி வருகின்றது. தற்போது காலநிலை மாற்றம் இலங்கையில் உள்ளக குடியேற்றவாசிகள் உருவாகியுள்ளனர்.

சிலர் தாம் பிறந்த இடத்தை கைவிட்டு செல்ல நேரிட்டுள்ளதுடன் சிலர் மேற்கொண்டு வந்த தமது பாரம்பரிய வாழ்வாதார தொழிலை கைவிட்டு வேறு இடங்களுக்கு தொழிலை தேடி புலம்பெயர நேரிட்டுள்ளது.

OruvanOruvan

கீதிகா செவ்வந்தி தற்போது உடுகம,அளுத்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதான யுவதி.அவர் பிறந்தது முதல் காலி நெலுவ பிரதேசத்தில் வசித்து வந்தார்.தனது தந்தையின் தந்தை கூட வாழ்ந்த இவரது வீடு எண்ணிப்பார்க்க முடியாத நேரத்தில் இவர்களுக்கு இல்லாமல் போனது.

“ நான் சிறு வயதில் வாழ்ந்த நெலுவவில் உள்ள காணியில் இருந்த வீட்டிலேயே எனது பாட்டனார் கூட வாழ்ந்துள்ளார். பிரதான வருமான வழி தேயிலை என்பதால், தோட்டத்தில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தது. எமது வீட்டுக்கு அருகில் உள்ள மலைகளிலும் தேயிலையே பயிரிடப்பட்டுள்ளது. நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது கூட நாங்கள் வாழ்ந்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் இருக்கவில்லை” என கீதிகா கூறியுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு நெலுவவில் இருந்த தமது வீட்டை இவர்கள் இழக்கின்றனர். கீதிகா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்த போது நிகழ்ந்த சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

“2003 ஆம் ஆண்டு பெரிய வெள்ளம் ஏற்பட்டது எனக்கு நினைவில் உள்ளது.எனும் எங்கள் வீடு மண்சரிவுக்கு உள்ளாகவில்லை. எனினும் பின்னர் மழை அதிகரிக்க ஆரம்பித்தது. திடீரென கனமழை பெய்யும்.இப்படி ஆரம்பித் பின்னர் 2017 ஆம் ஆண்டு கனமழை பெய்துக்கொண்டிருந்த போது, எமது வீட்டுக்கு மேலே இருந்த அனைத்து வீடுகளும் மண் சரிவுக்கு உள்ளாகின. சேற்று நீர் வரும் போது நாங்கள் கவனத்துடன் இருந்ததால், எமது வீட்டில் இருந்த எவருக்கும் எதுவும் ஏற்படவில்லை.எனினும் நான் சிறுவயதில் இருந்து வாழ்ந்த வீட்டை நாங்கள் இழந்தோம்.” என கீதிகா கூறியுள்ளார்.

இதன் பின்னர் அந்த இடம் வாழ்வதற்கு பாதுகாப்பற்றது என தீர்மானித்து, அரசாங்கம் அவர்களுக்கு இழப்பீடு வழங்கி, உடுகம பிரதேசத்தில் வேறு காணி ஒன்றை வழங்கியது. தற்போது இவர்கள் உடுகம பிரதேசத்தில் வசித்து வருகின்றனர்.

“ புதிதாக வீட்டை கட்டுவதற்கு கிடைத்த இழப்பீட்டு பணம் போதுமானதாக இருக்கவில்லை.ஆரம்பத்தில் காணியில் அம்மாவும் அப்பாவும் குடில் ஒன்றை அமைத்தே வசித்தனர்.புதிய இடத்திலும் பெரிய தண்ணீர் பிரச்சினை இருக்கின்றது.சகல இடங்களிலும் செம்பனை மரங்கள் வளர்க்கப்படுவதால், கிணறுகள் வற்றி போயுள்ளன. பிரதேச சபை தண்ணீர் வழங்குவதாக கூறினாலும் இதுவரை வழங்கவில்லை” எனவும் கீதிகா குறிப்பிட்டுள்ளார்.

கீதிகா என்பவர் தனது முதல் வீட்டை இழந்த ஒருவர் மட்டுமே.அந்த பிரதேசத்தில் காலநிலை மாற்றத்தல் வீடுகளை இழந்த பலர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

OruvanOruvan

தண்ணீர் இல்லாமல் எப்படி விவசாயம் செய்வது?

ஹம்போகமுவ மயிலவெல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான தினேஷ் பண்டார என்பவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

தினேஷ் தற்போது பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.இவர் தனது பாரம்பரிய தொழிலான விவசாயத்தை கைவிட்டு, வேறு ஒரு வேலையை தேடி கடந்த 2020 ஆம் ஆண்டு கொழும்பு இடம்பெயர்ந்தார்.

“எனது தந்தை, தாய் என அனைவரும் விவசாயம் செய்தே வாழ்ந்து வந்தோம்.யானைகள் இருந்தாலும் அவற்றுடன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை எனது பாட்டனாரும்,தந்தையும் அறிந்திருந்தனர். இரண்டு போகங்களிலும் சிறப்பான பயிர் செய்யக்கூடிய வகையில் மழை காலங்கள் இருந்தன. ஹம்பேகமுவ தண்ணீர் குறைந்த பிரதேசமாக இருந்தாலும் மழைக்காலங்களில் குளத்தில் நிரம்பும் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்தோம் என்பது எனக்கு நினைவுள்ளது.” என தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு ஹம்பேகமு பிரதேசத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. இந்த வறட்சி காரணமாக குளம் முற்றாக வற்றிப்போனது. குளத்திற்கு மத்தியில் சேற்று மண் மாத்திரம் எஞ்சியது என்கிறார் தினேஷ்.

“ எமது பாட்டனாரும், தந்தையும் விவசாயம் செய்யும் காலத்தில் சரியான பருவகாலங்களில் மழை பெய்தது.கனமழை வறட்சியாக இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்கவில்லை. தற்போது இருப்பது போல் கடந்த காலங்களில் கிராமத்தில் அதிகமான வெப்ப நிலை காணப்படவில்லை. 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளிலேயே நான் இதனை நன்றாக உணர்ந்தேன். மழை பெய்யும் காலங்கள் மாறிப்போனது. திடீரென சிறியளவில் மழை பெய்யும். சில நேரங்களில் கனமழை பெய்யும்” என அவர் விபரித்துள்ளார்.

நான் இறுதியாக வாழையை பயிரிட்டேன்.தண்ணீர் குறைவாக கிடைத்ததால் முழுவதும் நஷ்டமானது. சில போகங்கள் இப்படியான நிலைமை ஏற்பட்டதால், தொழிலை தேடி கொழும்புக்கு வந்தேன். வேறு என்ன செய்ய முடியும்” எனவும் தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்த தினேஷ் பண்டார, இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டுள்ளது.

“நான் தொழிலுக்கு வந்த ஆரம்ப காலத்தில் ஒரு மாதத்திற்கு குறைவாக தொகையே செலவானது. மீதமிருந்த பணம், மனைவி, பிள்ளை வாழ்வதற்கு போதுமானதாக இருந்தது. தற்போது செலவுகள் அதிகரித்துள்ளதால், விடுதிக்கு மாத்திரம் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. ஊரில் இருந்து அரிசி மற்றும் தேங்காய்களை எடுத்து வருவேன். தொழிற்சாலையில் வேலை செய்யும் நேரத்தில் சாப்பாடு தருவார்கள். ஏனைய வேளைகளில் சாப்பிடுவதற்கு மாதாந்தம் 10 ஆயிரம் ரூபா வரை செலவாகின்றது. தற்போது பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளதால், வாழ்க்கையை கொண்டு நடத்துவது சிரமமாக இருக்கின்து. மனைவி, தற்போது துணி தைக்க ஆரம்பித்துள்ளார்” எனவும் தினேஷ் தனது பொருளாதார நிலைமை குறித்து விபரித்துள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக தனது பிரதேசத்தை சேர்ந்த தமது வாழ்வாதாரத்தை இழந்த பலர் வேறு தொழில்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக தமது சொந்த பிரதேசங்கள மற்றும் தமது அன்புக்குரியவர்களை பிரிந்து தமது வாழ்வாதாரத்திற்காக இடம்பெயரும் பெருந்தொகையானோர் இலங்கையில் மாத்திரமல்லாது முழு உலகிலும் இருக்கின்றனர்.

அண்மையில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பாக மாநாடு நடந்தது.

இந்த பிரச்சினை சம்பந்தமாக உலக சமூகம் தற்போது சில தலையீடுகளை மேற்கொண்ட போதிலும் இன்னும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.

பி.பி.சி சிங்கள