யுக்திய சுற்றிவளைப்பு: குற்றவாளிகளை பிடிக்க நல்லூரில் மண்டியிட்ட பொலிஸார்

OruvanOruvan

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு விசேட செயற்திட்டமான "யுக்திய சுற்றிவளைப்பு" நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸார் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பதில் பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க "யுக்திய சுற்றிவளைப்பு" நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என இதுவரையில் ஆயிரக்கணக்கானோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிஸாரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

விசேட பூஜை வழிபாட்டில் யாழ்ப்பாணம மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் , யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.