ஹூதி கிளர்ச்சியாளர்கள் இலங்கைக்கு எதிராக திரும்பினால் யார் பொறுப்புக் கூறுவது?: ஜனாதிபதியிடம் எழுப்பப்படும் கேள்வி

OruvanOruvan

ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு கப்பலை அனுப்பும் முடிவை யாரிடம் கேட்டு ஜனாதிபதி எடுத்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்.

"தமக்கு எதிராக செயற்படும் நாடுகளுக்கு எதிராக செயற்படுவோம் என ஹூதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படியொரு பிரச்சினை இந்நாட்டுக்கு வந்தால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க யாரிடம் கேட்டு இந்த தீர்மானத்தை எடுத்தார், பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்பட்டதா, மக்களிடம் கருத்து கோரப்பட்டதா? தன்னிச்சையான முறையிலேயே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார். இதன்மூலம் நாட்டின் எதிர்காலம் ஆபத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.

தமக்கு எதிராக மனித உரிமை விவகாரங்களை எழுப்பும் நாடுகளை சமாளிக்கவே இவ்வாறு கப்பல் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது." - என்றார்.