லிட்ரோ பங்குகள் விற்பனை: அரசாங்கத்தின் தீர்மானம்

OruvanOruvan

Litro Gas

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் மற்றும் லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

லிட்ரோ நிறுவனத்தின் முழு பங்கு அல்லது பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்வதற்கான விண்ணப்பங்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய விண்ணப்பத்தாரர்கள் கீழுள்ள இணையத்தள முகவரியின் https://www.treasury.gov.lk/web/sru-entities-to-be-divested/section/litro-gas-lanka ஊடாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்யின் 99.936 வீத பங்குகளையும், லிட்ரோ கேஸ் டெர்மினல் லங்கா (பிரைவேட்) கம்பனியின் 100 வீத பங்குகளையும் இலங்கை அரசாங்கம் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.