பொதுமக்களுக்கு இடையூறுகள்: பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு

OruvanOruvan

University Student Protest

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (17) பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆர்ப்பாட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என மருதானை பொலிஸ் பொலிஸார் தெரிவித்தமையை கவனத்தில் கொண்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, குலரத்ன மாவத்தை (மரதானை வீதி), சங்கராஜ மாவத்தை, டீன்ஸ் வீதி, டாலி வீதி மற்றும் வைத்தியசாலை சதுக்கங்களை நடைபாதைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக மதுஷன் சந்திரஜித் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.