அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டம்: பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல்
கொழும்பு, விஜேராம மாவத்தையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.
அனைத்து பல்கலைக்காக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை கருத்திற் கொண்டு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை இன்று (17) முற்பகல் பிறப்பித்திருந்தது.
அந்த உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக மாணவர்கள், டீன் வீதி, குலரத்ன மாவத்தை, டி.பி. ஜயா மாவத்தை உள்ளிட்ட கொழும்பின் பல பகுதிகளில் பொதுமக்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்பதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந் நிலையில், அனைத்து பல்கலைக்காக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காகவே பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.