பேச்சுவார்த்தை தோல்வி: நாடளாவிய ரீதியில் தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

OruvanOruvan

Nurses strike island wide

அரச தாதியர் சங்கம் இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுகாதார அமைச்சர் மற்றும் இராஜாங்க நிதி அமைச்சர் ஆகியோருக்கு இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் உரிய தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அரச தாதியர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பல்வேறு சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (17) காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என வைத்திய சேவை ஒருங்கிணைந்த முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.