15 நாட்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை: இந்த வருடம் 23 இலட்சத்தை கடக்குமென எதிர்பார்ப்பு

OruvanOruvan

Tourist in Srilanka

2024 ஆம் ஆண்டின் முதல் 15 நாட்களில் இலங்கைக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது.

இதன்படி, ஒரு இலட்சத்து 1,362 சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முழுவதும் 2,545 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகைத்தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, கடந்த ஆண்டு 14 இலட்சத்து 87,303 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர். அத்துடன், இந்த வருடம் இருபத்து மூன்று இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.