இன்று ஓரளவு மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

OruvanOruvan

Rainy Day

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று ஓரளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இது தவிர, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற காலநிலை காணப்படுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.