துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு இரத்து: இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாகும்

OruvanOruvan

Member of Parliament MA Sumanthran Eranga Jayawardena

இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்றையதினம் முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்திருந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த பொதுமன்னிப்பை புறந்தள்ளி அதுதவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாரதலக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் ஆஜராகி வாதாடி இருக்கின்றேன் .

இலங்கை சரித்திரத்தில் முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம். வேறு சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி குறித்து நாமும் பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை” என தெரிவித்தார்.