மட்டக்களப்பில் சீரற்ற காலநிலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள்: நிவாரண உதவிகளை வழங்கிய லைக்கா ஞானம் அறக்கட்டளை

OruvanOruvan

இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

கடந்த டிசம்பர் 28ஆம் திகதி முதல் 2024 ஜனவரி 4 ஆம் திகதிவரை பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளை கடுமையாக பாதித்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புனானை, மைலவெட்டுவான், ஏறாவூர், கட்டுமுறிவு, சித்தாண்டி, வந்தாறுமூலை மேற்கு, உள்ளிட்ட பல கிராமங்களில் வாழும் மக்கள் வெள்ள அனர்த்தில் தங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் உடமைகளை இழந்திருந்தனர்.

இந்தக் கிராமங்களில், பாதிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, இணை நிறுவனர்களான லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், ஞானாம்பிகை அல்லிராஜா தலைமையிலான லைக்கா ஞானம் அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (14.01.24) பொங்கல் தினத்திலும் (15.01.24), பாதிக்கப்பட்ட கிராமங்களின் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களுடன் பொங்கலையும், லைக்கா ஞானம் அறக்கட்டளை நேரடியாக வழங்கி வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்கான உதவிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது குறிப்பிடத்தக்கது.

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan

OruvanOruvan