கொழும்பு தேசிய வைத்தியசாலையில் stents உபகரணம் பற்றாக்குறை: நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து

OruvanOruvan

Lack of stent equipment

இதய சத்திர சிகிச்சைக்கு தேவையான ஸ்டென்ட் (stents) உபகரணம் பற்றாக்குறையினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஸ்டென்ட் பற்றாக்குறை நிலவுவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குமார விக்கிரமசிங்க ஒப்புக்கொண்டுள்ளார்.