சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டு கைதான இந்திய மீனவர்கள்: விளக்குமறியலில் வைக்க நீதவான் உத்தரவு

OruvanOruvan

District & Magistrate's court Mannar

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டு கைதான 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் விளக்குமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று உத்தரவிட்டார்.

இலங்கையின் தென் கடல் கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 18 இந்திய மீனவர்களை நேற்றைய தினம் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைதான மீனவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகு உள்ளிட்ட பொருட்களும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து கைதான மீனவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த மீனவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 18 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

OruvanOruvan