வெள்ளக் கட்டுப்பாட்டுத்திட்டம் நடைமுறை: 2,482 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

OruvanOruvan

flood control in colombo

மேல் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக 2,482 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தில் பிரதான வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இலங்கை நில அளவைத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த பின்னணியில், மேல்மாகாண வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு 6 பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த வருடம் கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்திற்காக 292 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் உலக வங்கியின் உதவியுடன் 2012 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.