தேசிய வைத்தியசாலைக்கு உணவு வழங்கும் ஒப்பந்தத்தை ஹில்டன் ஹோட்டலுக்கு வழங்க வேண்டும்: அரசாங்கத்திடம் விடுக்கப்படும் கோரிக்கை

OruvanOruvan

PC

தேசிய வைத்தியசாலையில் நோயாளிகளின் உணவுத் தேவைக்காக மாதாந்தம் 76 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அரச வைத்தியர் மன்றம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்கணிப்பு குறித்து ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட அரச வைத்தியர் மன்றத்தின் தலைவர் கலாநிதி ருக்ஷான் பெல்லான,

நோயாளிகளின் உணவுத் தேவைக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாதாந்தம் 76 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது. ஒப்பந்தத்தின் பிரகாரம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

ஆனால், இந்த தொகைக்கு மிகவும் தரமான உணவுகளை ஹில்டன் ஹோட்டலுக்கு ஒப்பந்தத்தை வழங்குவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். செலவுகளை ஒப்பிடும் போது ஹில்டன் ஹோட்டலில் இருந்து உணவுகளை பெறுவது இலாபகரமாக இருக்கும்.

இவ்வாறான துறைகளை தனியாரிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கத்திடம் கோருகிறோம். அதன்மூலம் நாம் வினைத்திறனான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

வைத்தியர்களுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது போல் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கும் கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோருகிறோம். அதற்காகவே பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.