ரயிலுடன் கார் மோதி விபத்து: ஆபத்தான நிலையில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
ஜா-எல குடஹாகபொல ரயில் கடவையில் இன்று (17) பிற்பகல் ரயிலுடன் கார் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க நோக்கி எரிபொருள் சுமந்து சென்ற ரயிலுடன் கார் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காரில் பயணித்த தம்பதியரும், அவரது தாய் மற்றும் மகள் ஆகியோரும் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் கம்பஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.