கராப்பிட்டிய வைத்தியசாலை சத்திரசிகிச்சை நிபுணருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: சுகாதார அமைச்சுக்கு ரவி குமுதேஷ் கடிதம்
கராப்பிட்டிய பொது வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரான கிஷாந்த பெரேராவின் நடத்தைக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
நேற்றைய தினம் (16) வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட சிரேஷ்ட ஊழியர்களை அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதற்காக குறித்த சத்திரசிகிச்சை நிபுணருக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென அவர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை தாமதமானால் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.