கொழும்பில் ஒருவரின் அடிப்படை தேவைக்கு மாதத்துக்கு 17,582 ரூபா: தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களம்

OruvanOruvan

A daily wage laborer in Colombo, Sri Lanka.

2023 நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர வறுமைக்கோடு அட்டவணையினை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாதத்தில் இலங்கையில் வாழும் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை தேசிய ரீதியாக செய்வதற்கு தேவைப்படும் தொகை 16,302 ரூபாவென அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை தேசிய அளவில் கடந்த 2023 ஒக்டோபர் மாதம் 16,112 ரூபாவாக பதிவாகியிருந்தது.

குறித்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் படி மாவட்ட ரீதியில் கொழும்வில் வசிக்கும் ஒருவர், ஒரு மாதத்தில் தமது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது.

அதன்படி, அந்த தொகை 17,582 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய 15,587 ரூபா தேவை என்ற நிலை உள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒருவருக்கு குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான குறைந்த செலவு கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது.

OruvanOruvan