பாடசாலை ஆரம்பிக்கப்படும் திகதியில் மாற்றம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

OruvanOruvan

School student in sri lanka

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணையில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.

இருப்பினும், கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பாட வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து குறித்த பரீட்சையினை மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தர விவசாய விஞ்ஞான பாட வினாத்தாளின் இரண்டாம் பகுதி பெப்ரவரி மாதம் முதலாம் திகதி காலை 8.30 முதல் 11.40 வரை நடைபெறவுள்ளது. அத்துடன், முதல் பகுதி குறித்த தினத்தின் பிற்பகல் 01.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.