யுக்திய சுற்றிவளைப்பு: 24 மணிநேரத்தில் 1,024 சந்தேகநபர்கள் கைது

OruvanOruvan

Tactical Encirclement

கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மேலும் 1,024 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, பல்வேறு போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 699 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேகநபர்களின் பட்டியலில் இருந்த 325 சந்தேகநபர்கள் உள்ளிட்ட 1,024 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 227 கிராம் ஹெராயின், 168 கிராம் ஐஸ்போதைபொருள், கஞ்சா 8 கிலோ 40 கிராம், 13,892 கஞ்சா செடிகள், மாவா 227 கிராம், மதன மோதக 24 கிராம், 647 போதை மாத்திரைகள் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 699 சந்தேக நபர்களில் 13 சந்தேகநபர்கள் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களில் போதைக்கு அடிமையான 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் விசேட பணியகத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 45 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்பிரிவு நிலையத் பொலிஸாருக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 325 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த சந்தேக நபர்களில்,

நச்சு போதைப்பொருள் குற்றங்களுக்காக 92 சந்தேக நபர்களுக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தவிர்ந்த குற்றங்களுக்காக திறந்த பிடியாணை 211 சந்தேகநபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்ட 11 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

வன்முறைக் குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்கள் குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேக நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் நாடளாவிய ரீதியில் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.