வாழைத்தோட்டத்தில் அரங்கேறிய படுகொலை: பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் புதிய தகவல்

OruvanOruvan

Keselwatta Police in Srilanka

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் வெளிநாட்டைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதன‍ை தெரிவித்துள்ளார்.

கொலை இடம்பெறும் போது குறித்த நபர் தனது வீட்டில் இருந்ததாகவும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போதே முச்சக்கர வண்டியில் வந்த ஐவர் இந்த கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கொலையை செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இதற்காக பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாழைத்தோட்டம் பகுதியில் நேற்றிரவு (11) கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டே குறித்த நபர் உயிரிழந்திருந்தார்.

கொழும்பு 12 - மேடிஸ் லேன் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.