கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலை: தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் மேலும் ஒத்திவைப்பு

OruvanOruvan

Southeastern University academic activities

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மேலும் நீடிக்கப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதிவரையில் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

“தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்து மூத்த ஆலோசனைக் குழுவின் தீர்மானத்திற்கேற்ப எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி வரையில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் தொடர் மழை காரணமாக பல்கலைக்கழக பகுதி வெள்ள நீரில் மூழ்கியது. இதன்காரணமாக பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மீண்டும் வழமைக்கு திரும்பும் சூழலில் கல்வி நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கமுடியும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.