கட்டுநாயக்கவில் 17 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்: ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன ஊழியர் கைது

OruvanOruvan

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் வைத்து 17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் சூட்சுமமான முறையில் உள்ளாடைக்குள் தங்க பிஸ்கட்டுகளை மறைத்து வைத்துள்ளார்.

விமான நிலைய புறப்படும் முனையத்தின் பணியாளர்கள் வெளியேறும் வாயில் வழியாக வெளியேறும்போதே குறித்த சந்தேக நபரை சோதனைக்கு உட்படுத்தியபோது 66 தங்க பிஸ்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட தங்கம் 7 கிலோ 700 கிராம் எடையுடையது எனவும், இதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் எனவும் சுங்க திணைக்கள அதிகாரிகள் மதிப்பிடப்பட்டுள்ளனர்.

கைதான சந்தேகநபர் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் 15 வருடங்களுக்கு மேலாக பணிபுரிபவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைனகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.