சிறையில் சிகிச்சை பெற்ற ஜெரோம் பெர்னாண்டோ: அரிப்பு ஏற்பட்டதாக வைத்தியரிடம் தெரிவிப்பு

OruvanOruvan

Jerome Fernando

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சிறைச்சாலை வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

அவரது உடலில் ஏற்பட்ட அரிப்பு காரணமாகவே இவ்வாறு சிறைச்சாலை வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.

பிற மதத்தினரை இழிவுப்படுத்தியமை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த முதலாம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.