தாய்மொழி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு: முதல் பரிசுக்கு 25,000 ரூபாய் பணப்பரிசு
வங்காளதேசம் உயர் ஸ்தானிகராலயம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து பெப்ரவரி 21, 2024 அன்று உலக தாய்மொழி தினத்தை கொண்டாட ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளன.
அரச மற்றும் தனியார் பாடசாலை மாணவர்கள் இதில் பங்கேற்க முடியும்.
மேற்படி நிகழ்சியின் மூலம் பாடசாலை மாணவர்களின் படைப்பாற்றல் மேம்படுத்தம் நோக்கில் அவர்களின் தாய்மொழியில் கட்டுரைப்போட்டியையும் ஓவியப்போட்டியையும் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது,
குறித்த போட்டியின் ரூலம் மாணவர்களுக்கு பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதனடிப்படையல், முதலாம் இடம்பெறுபவருக்கு 25,000மூபாவும் இரண்டாம் இடம் பெறுவோருக்கு 20,000 ரூபாவும் மூன்றாம் இடம் பெறுபவருக்கு 15,000 ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விரிவான தகவல்களை கீழ்காணும் இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளுங்கள்...👇