கூரையில் இருந்து கீழே விழுந்த நபர் - மருதானை இரயில் நிலையத்தில் பதற்றம்: மருதானை பொலிஸ் மற்றும் இரயில் நிலைய அதிகாரிகள் அந்த நபரை கூரையில் இருந்து இறக்குவதற்கு முயற்சித்த போதும் குறித்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

OruvanOruvan

Maradana Railway Station

மருதானை இரயில் நிலையத்தில் கூரைமீதேறி விழுந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் மருதானை இரயில் நிலையத்தின் 05 மற்றும் 06 ஆம் தளங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் கூரை மீது நடக்க முற்பட்ட நிலையில் கீழே விழுந்துள்ளார்.

மருதானை பொலிஸ் மற்றும் இரயில் நிலைய அதிகாரிகள் அந்த நபரை கூரையில் இருந்து இறக்குவதற்கு முயற்சித்த போதும் குறித்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த நபர் கூரையில் நடந்துசென்ற போது கூரைத்தகடு உடைந்து கீழே விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.