போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் எட்டு மணிநேரம் வாக்குமூலம் பதிவு: இன்று மாலை தமது வாக்குமூலத்தை வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, வெளியேறியிருந்தார்.

OruvanOruvan

Pastor Jerome Fernando

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ 8 மணித்தியாலங்கள் வரை நீண்ட வாக்குமூலமொன்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கியுள்ளார்.

இலங்கையில் மதச்சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, கருத்துக்களை வெளியிட்டமையானது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜெரோம் பெர்னாண்டோ, நாடு திரும்பியதும் கைதுசெய்யப்பட வேண்டுமென்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீள பெற்றிருந்த நிலையில் அவர் நேற்று நாடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், வாக்குமூலமொன்றை வழங்க இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான அவர், 8 மணித்தியால விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று மாலை தமது வாக்குமூலத்தை வழங்கிவிட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.