புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 34 கிலோ கேரளா கஞ்சா மீட்பு - இளைஞன் கைது: 3 பரல்களில் 17 பொதிகளாக கஞ்சா நிலத்தில் புதைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , வத்திராயன் பகுதியில் நிலத்தில் புதைத்து வைத்திருந்த சுமார் 34 கிலோ கேரளா கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், அதனை புதைத்து வைத்தார் எனும் சந்தேகத்தில் 24 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.
வத்திராயன் பகுதியில் கடற்கரையை அண்டிய பகுதியில் கஞ்சா புதைத்து வைத்திருப்பதாக மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
அதன்போது 3 பரல்களில் 17 பொதிகளாக கஞ்சா நிலத்தில் புதைத்து வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 13 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.