நிதிமோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட Binance தலைவர்; உலக சந்தையில் வீழ்ச்சியடையும் கிரிப்டோகரன்சி: இந்த பணப்பரிவர்த்தனை மூலம் பயங்கரவாதிகளும், குற்றவாளிகளும் பணத்தை நகர்த்துவது எளிதாகிவிட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

OruvanOruvan

உலகின் மிகப் பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்ற வலையமைப்பின் Binance இன் நிறுவனர் மற்றும் தலைவர் சாங்பெங் ஜாவோ நிதிமோசடி குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிமாற்றமான Binance இடமிருந்து நான்கரை பில்லியன் டொலர்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் உள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் வரிகள் கட்டுவதை தவிர்க்க Binance உதவியதாக இருந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பணப்பரிவர்த்தனை மூலம் பயங்கரவாதிகளும், குற்றவாளிகளும் பணத்தை நகர்த்துவது எளிதாகிவிட்டதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.

சாங்பெங் ஜாவோவின் இராஜினாமாவால், கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது.

Binance மீது வழக்கு பதிவு

Binance மீது அமெரிக்க சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் இரு முக்கிய குற்றத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடுத்தது.

Binance வலையமைப்பின் மதிப்பு 64 பில்லியன் டொலராகும். Binance நிறுவனத்தின் மொத்த மூலதனத்தில் டெதர், பிட்காயின், எதிரியம், Binance, USD, BNB காயின் ஆகியவை மட்டும் 81 சதவீதத்தை கொண்டவை.

Binance மீது வழக்கு தொடரப்பட்ட காலம் முதல் இத்தளத்தில் இருந்த முதலீடுகள் குறைந்துவந்தன. இந்நிலையில், நிதிமோசடி குற்றச்சாட்டை நிறுவனத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதால் மேலும் அதன் முதலீடுகள் வீழ்ச்சியடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

Changpeng Zhao

சீனாவில் பிறந்து 12 வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்த கோடீஸ்வரரான ஜாவோ, CFTC இன் முறைப்பாட்டை "எதிர்பாராதது மற்றும் ஏமாற்றமளிக்கிறது" என்று கூறினார். முதற்கட்ட மதிப்பாய்வில், முறைப்பாட்டில் முழுமையற்ற உண்மைகள் இருப்பதாகவும், முறைப்பாட்டை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம் என சாங்பெங் ஜாவோ வெளியிட்ட அறிக்கையில் கூயிருந்த பின்புலத்திலேயே தற்போது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

டிசம்பரில் பஹாமாஸில் கைது செய்யப்பட்டு, இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து அமெரிக்க குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் கிரிப்டோ தளமான FTX இன் நிறுவனர், சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் மற்றும் அவருடன் பணியாற்றிய மூத்த அதிகாரிகள் அனைவரும் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.