ஊவா மாகாணத்தில் ஆரம்பமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் இன்று வடமாகாணத்தில் தொடர்கிறது: நாட்டில் வைத்தியர்களை தக்கவைப்பதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

GMOA protest

மாகாண மட்டத்தில் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் இன்று வட மாகாணத்திலும் தொடர்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வைத்தியர்களை தக்கவைப்பதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று காலை 8 மணி முதல் ஊவா மாகாணத்தில் இந்த அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்பட்டதுடன், இதன் காரணமாக நோயாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் ஆரம்பமானது.

இதன்படி, குறித்த பேரணி பொது நூலகம் வரை சென்ற நிலையில், பொலிஸாரினால் இடைமறிக்கப்பட்டமையால் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனிடையே பேராதனை பல்கலைக்கழகத்தின் ஆசிரிய, மாணவர் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து பேரணி ஒன்றை ஆரம்பித்ததுடன், போராட்டத்தை பொலிஸார் தடுத்து நிறுத்த முற்பட்டதன் காரணமாக கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.