சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு: இவ்வருட மாநாட்டில் கட்சியின் அரசியலமைப்பில் சில விசேட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.

OruvanOruvan

United Nation Party committee meeting

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட பொது மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் முகமாக நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர்,

இவ்வருட மாநாட்டில் கட்சியின் அரசியலமைப்பில் சில விசேட திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை இலகுவாகக் கட்டியெழுப்பக்கூடிய அரசியல் கட்சியாக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசியலமைப்பு மாற்றம் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நட்பு அரசியல் கட்சிகளை கையாள்வதற்காக அரசியலமைப்பில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொது மாநாட்டின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை முழுவதும் அனைத்து இனங்கள், மதங்கள், இனங்கள் மற்றும் இளைஞர்களை முன்னேற்றுவதற்கான புதிய போக்கை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பழமையான அரசியல் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி, இந்த விசேட பொது மாநாட்டை நடாத்துவதாகவும், கடந்த கால சவால்களை வென்றது போன்று எதிர்கால சவால்களையும் வெற்றிகொள்ளும் ஆற்றல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்தார்.