ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் 50 வீத வாக்குகள் கிடைக்காது-டியூ. குணசேகர: 1880 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியா உலகை ஆட்சி செய்து வந்தது. 1945 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா உலகை ஆட்சி செய்தது.
அபிவிருத்தியடைந்த நாடுகள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து வருவதால், தற்போது அரசியல் அல்லது பொருளாதார ரீதியில் உலகை கட்டுப்படுத்தும் எந்த சக்தியும் இல்லை என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் எதிர்நோக்கி வருகின்றன.
உலகில் முதலாளித்துவ தலைமை நாடு என்ற வகையில் அமெரிக்க ராஜாங்க செயலாளர் பகிரங்கமாக இந்த நிலைமையை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எமது நாட்டின் ஊடகங்கள் மாத்திரமல்ல அரசியல் துறையும் அது குறித்து கவனம் செலுத்தவில்லை.
1880 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியா உலகை ஆட்சி செய்து வந்தது. 1945 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா உலகை ஆட்சி செய்தது.
தற்போது அவர்கள் எவரும் இல்லாத நடுநிலையான பொருளாதாரம் அல்லது அரசியல் ரீதியான கட்டுப்பாடு இல்லை நிலைமைக்கு உலகம் வந்துள்ளது.
காலனத்துவ நாடாக இருந்து 1945 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிராந்தியம் என்ற ரீதியில் 285 போர்களை சந்தித்து, ஏகாதிபத்தி அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை நாம் எதிர்நோக்க நேரிட்டது.
இலங்கை, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளின் முன்னேற்றத்தை தடுத்த அந்த ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்துள்ளது.
கருத்து கணிப்பு அறிக்கைகளுக்கு அமைய அடுத்தாண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் எந்த வேட்பாளருக்கும் 50 வீத வாக்குகளை பெற முடியாது. அனைத்து அரசியல் கட்சிகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.
இதனால், அடுத்த 12 மாதங்களில் புதிய அரசியல் அணி உருவாகுவதை தடுக்க முடியாது.
யார் ஜனாதிபதியாக பதவிக்கு வருவார், யார் ஆட்சியை கைப்பற்ற போகின்றனர் என்பதை கூறுவது சிரமம்.
இதனால், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள புதிய பொருளாதார பொறிமுறை அவசியம். அது தேசிய ஜனநாயக பொறிமுறையாக இருக்க வேண்டும்.
அதில் தேசிய மற்றும் முற்போக்கு சக்திகள் இணைந்து, பொருத்தமான வேலைத்திட்டத்திற்கு செல்ல வேண்டும் எனவும் டியூ. குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.