இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக நடக்கும் அரசியல் யுத்தம் பற்றி கூறும் அனுரகுமார: அந்த போரின் வலிமை மற்றும் அளவை புரிந்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி களத்தில் இறங்கியுள்ளது என்பதை ரணில் மற்றும் மகிந்த ஆகிய இரண்டு தரப்பினரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

OruvanOruvan

Anura Kumara Dissanayake MP Photo Credit: Getty Inages

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன் முறையாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் உண்மையான அரசியல் யுத்தம் நடக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை அழித்த அரசியல் முகாமுக்கும் அதற்கு எதிராக நாட்டை கட்டியெழுப்பும் அரசியல் முகாமுக்கும் இடையில் இந்த அரசியல் யுத்தம் நடக்கும்.

அந்த போரின் வலிமை மற்றும் அளவை புரிந்துக்கொண்டு தேசிய மக்கள் சக்தி களத்தில் இறங்கியுள்ளது என்பதை ரணில் மற்றும் மகிந்த ஆகிய இரண்டு தரப்பினரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

குழப்பமான அரசியல் தற்போது ஏற்படும். இன்னும் ஒரு வருடமே எஞ்சி இருக்கின்றது. அடுத்தாண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பமாகும்.

2015 ஆம் ஆண்டு மைத்திரிபால, மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொண்டார். அந்த போராட்டத்தில் ஆட்சிக்கு வந்த மைத்திரிபால, 2018 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்கினார். இவை உண்மையான போராட்டமா?.

2019 ஆம் ஆண்டு ரணிலுக்கு எதிராக எப்படியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது?. ரணில் ஈஸ்டர் தாக்குதல் நடக்க இடமளித்தார்,ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்றார். மத்திய வங்கியை வங்குரோத்து அடைய செய்தார், இதனால் ரணிலை விரட்ட வேண்டும் என்று கூறினர்.

எனினும் 2022 ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவை அழைத்து ஜனாதிபதி பதவியை வழங்கினர்.

எனினும் இலங்கையில் முதல் முறையாக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் உண்மையான அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.