அசானிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் பாராட்டு: மலையக மக்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அவர் பாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார்.
மலையக மக்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அசானி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நேற்று தெரிவித்தார்.
மலையகப் பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே வடிவேல் சுரேஷ் இவ்வாறு தெரிவித்தார்.
சரிகமப நிகழ்ச்சியில் கண்டி பகுதியைச் சேர்ந்த தேயிலை பறிக்கும் தொழிலாளியின் மகளான அசானி கனகராஜின் பங்குப்பற்றுதல் மலையக மக்களுக்கு பெருமையாகும் எனவும் தெரிவித்தார்.
மலையக மக்களைக் கௌரவப்படுத்தும் வகையில் அவர் பாட்டு போட்டியில் பங்கேற்றுள்ளார்.வானொலியில் பாட்டு கேட்டு பாட பழகிய அசானியின் திறமையை உலகமே பாராட்டுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், சரிகமப பாடல் நிகழ்ச்சிக்கு அசானி தேர்வான நிலையில், ஜீ தமிழ் குழுவினர் மெகா ஓடிஷனில் பங்கேற்க சென்னை வர அழைத்துள்ளனர். ஆனால் வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தால் சென்னைக்கு வர தாமதமாகியுள்ளது.
நிழ்ச்சிக்கு தாமதமான அசானி ஏமாமாற்றத்துடன் நாடு திரும்ப கூடாது எனபதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் தன்னுடைய சிறப்பான குரலால் பாடி, அரங்கத்தை அசானி அதிர செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.