முல்லைத்தீவு மனித புதைகுழி விவகாரம் ; அடுத்த கட்ட வழக்கு விசாரணை நாளை மறுதினம்: தொல்பொருள் திணைக்களம் நாளை மறுதினம் இது தொடர்பிலான பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

OruvanOruvan

Investigates Mullaitivu Human burial Matter

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான அடுத்த கட்ட வழக்கு விசாரணையினை எதிர்வரும் 10ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிபதி ரி.பார்த்தீபன் தலைமையில் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்ட சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

OruvanOruvan

அதில், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாபத பிரிவில் இருந்து நிதி கிடைக்க இருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து 10ம் திகதி சந்தேகத்திற்கு இடமான பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான கணிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் அகழ்வுப்பணிக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களம் இதில் முன்னிலையாகாத நிலையில் நாளை மறுதினம் (10) பார்வையிட்டு மூன்று வார காலம் கேட்டு இது தொடர்பிலான பாதீட்டினை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக நீதிமன்றுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள் என்றும் சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.