இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்பட நடிகர் மரணம் : யாழில் இறுதி கிரியை: இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான வெண் சங்கு திரைப்படத்தில் சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் கதாநாயகனாக அறிமுகமானார்.

OruvanOruvan

Sri Lanka's first Tamil film Actor Dies

இலங்கையின் முதலாவது தமிழ் திரைப்படமான வெண் சங்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த மூத்த கலைஞர் சங்கரப்பிள்ளை புவனேஸ்வரன் நேற்று(24) வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார்.

யாழ்.கந்தர் மடத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று இறுதி கிரியைகள் நடைபெறுகின்றது.

இவர் கடந்த 26.10.1936ம் ஆண்டு வட்டுக்கோட்டை- சித்தங்கேணியில் பிறந்து, யாழ்ப்பாணம் - கந்தர் மடத்தடியில் வசித்து வந்தார்.

இவரது திரையுலக பயணம் இலங்கை தமிழ் திரையுலகில் ஒரு புதிய அத்திவாரமாக அமைந்தது. இலங்கை சினிமா வரலாற்றில் இவரின் இழப்பு ஓர் பேரிழப்பாகும்.

இதேவேளை, கலைஞர் சங்கரப்பிள்ளை புவனேஸ்வரனின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கு பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

OruvanOruvan

Sri Lanka's first Tamil film Actor Dies